Print this page

ஐஸ் வைத்திருந்த 12 பேர் கைது

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில், பல்வேறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாதுவ, மொரன்துடுவ பகுதியில் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.