Print this page

கண்டியில் கொரோனா நோயாளி சிக்கினார்

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்குரணை, தெலம்புகஹவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இன்றைய தினம் (28) அடையாளம் காணப்பட்டதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக இன்று அங்கொடை IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இந்த நபர் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Last modified on Saturday, 28 March 2020 13:25