Print this page

பிரிகேடியருக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில், கழுத்தை அறுப்பதைபோன்று பிரிகேடியர் பிரியங்க பொர்னான்டோ சைகை காட்டியமை தொடர்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான இரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை மீளப்பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இலங்கை சார்ப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வழக்கினை பெப்ரவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.