Print this page

இலங்கை படையினருக்கு பயிற்சி

February 01, 2019

கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, இந்திய கடற்டையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளது.

வான்வழி அவதானிப்பு பயிற்சி ஒத்திகைக்காகவே, இந்த டோனியர் விமானம் இந்திய கடற்படையினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரைக்கு அப்பால் 10 கடல் மைல் தொலைவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த இந்த பயிற்சி ஒத்திகை நேற்று வரை நீடித்தது.

இந்தப் பயிற்சியில், கடற்படையின் 12 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.