Print this page

ஊரடங்கு தளர்வு- 4 நகரங்களுக்கு பூட்டு

கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில், இன்றுகாலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்த ஊரடங்குச் சட்டம், இன்று (30) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்நிலையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், பதுளை மாவட்டத்தில் நான்கு நகரங்களை திறப்பதில்லை என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வெலிமட, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய நான்கு நகரங்களே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மூடப்பட்டிருக்கும் என்று பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டி சில்வா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அந்த நகரங்களிலிருந்து வெளி இடங்களுக்கு மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது, மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதால்,  வைரஸ் தொற்றக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு, நான்கு நகரங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்து. இன்று (30) கடைகளை முற்றாக மூடிவிட்டுள்ளனர்.