Print this page

சிறுமி கர்ப்பம்- சிக்கினார் சித்தப்பா

15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, அச்சிறுமியை கர்ப்பமாக்கினார் என்ற சந்தேகத்தில், அச்சிறுமியின் சிறிய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம்மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

8 மாத கர்ப்பணியாகிய குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்.

கொழும்பில் இருக்கும் சிறியதந்தையின் வீட்டுக்கு தனது தாயுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் சிறுமி சென்ற நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கர்ப்பமடைந்த சிறுமி, தனது வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து,  சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.