Print this page

இந்த வருட இறுதிக்குள் சீனா - இலங்கை ஒப்பந்தம்

February 01, 2019

இலங்கை - சீனாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்த வருடம் கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர வணிக உடன்பாட்டை இறுதி செய்வதற்கான ஆறாவது கட்டப் பேச்சுக்கள் கடந்த 2017 மார்ச் மாதம் நிறைவடைந்து விட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன சந்தைக்கு இலங்கையின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.