Print this page

இன்று சுதந்திர தின ஒத்திகை இல்லை

February 01, 2019

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறும் என முன்னரே அறிவித்திருந்த போதும், அது இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறும் போது காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை காலிமுகத்திடலை அண்மித்துள்ள வீதிகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அரசாங்கம், கோரியுள்ளது.