Print this page

நாளை முக்கிய தீர்மானம்-பிரதமர் மஹிந்த

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய கூட்டமொன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நாளை  (02) காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாட இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்களுக்கு அப்பால், ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, படைகளின் தளபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.