Print this page

புதுப்பொலிவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு

February 01, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவினை டிஜிட்டல் மயப்படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை அந்தஸ்தில்லா,  டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவினை டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் , நேற்று இடம்பெற்றதாக அமைச்சர்  அஜீத் பீ.பெரேரா  கூறினார்.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவினை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக,  அடுத்து வரும் தேர்தல் நடவடிக்கைகள் இலகுவாக்கப்படுவதுடன், விரைவாக முன்னெடுக்க கூடியதான இருக்கும் என, எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.