Print this page

மக்களை ஏமாற்றுகின்றனர் – அமைச்சர் சஜீத்

February 01, 2019

அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கே முயற்சிப்பதாக அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் முறை தொடர்ந்தும் நாட்டுக்கு பொருத்தமானது இல்லை என்றும் அமைச்சர் சஜீத் பிரேமதாச கூறியுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செமட்ட செவன திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஆனந்தப்புரம் வீடமைப்பு திட்டம் மக்கள் பாவனைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வீடுகளை கையளித்த அமைச்சர் சஜீத் பிரேமதாச, தற்போது காணப்படும் அரசியல் முறையில், நாட்டு மக்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவதற்கே முனைவதாக குற்றம் சுமத்தினார்.