Print this page

ஊரடங்கு தளர்த்தல் 2 மணிநேரம் நீடிப்பு

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தல் மற்றும் தளர்த்தல் தொடர்பில் புது அறிவிப்பொன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அந்த அறிக்கையில்

கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், மறு அறிவித்தல் வரையிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படும்.

இதேவேளை, ஏனைய 19  மாவட்டங்களிலும் இன்று (6) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், வியாழக்கிழமை 9ஆம் திகதி காலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

இதுவரையிலும் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையிலும் அமுல்படுத்தப்பட்டது.

எனினும், 9ஆம் திகதியன்று, காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். அதன்பிரகாரம் இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது.