Print this page

பிரித்தானிய பிரதமர் ICU இல் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 10 நாட்கள் சுயதனிமைக்குட்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் நேற்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

செயின்ட் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை 7 மணிக்கு உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அவர்களை பிரதமர் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முதல் வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப் பதில் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது, ஆனால் அவர் ஒரு தற்காலிக பிரதமர் அல்ல என்கின்ற கருத்து முன்வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா அறிகுறிகள் சற்றேனும் குறையாமல் இருந்தமையாலும் திடீரென உடல் வெப்பநிலை கூடுதலாக இருந்தமையாலும் அவரது மருத்துவர் அவரை உடனே வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியமையை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.