Print this page

அனில் ஜாசிங்க,மக்களுக்கு எச்சரிக்கை

கொரானா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது  உள்ளனர் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், நோய் குறித்த சரியான தகவல்களை வழங்குவதே சாலச் சிறந்தது என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய் குறித்தான தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள அவர், மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். 

Last modified on Tuesday, 07 April 2020 06:34