Print this page

ஐ.நா.நிபுணர் இலங்கை வருகிறார்

February 03, 2019

பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உண்மை கண்டறியும் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ளுமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இருந்து இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான தினத்தினை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக காத்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு நடைமுறைகள் பிரிவின் உதவி மனிதஉரிமைகள் அதிகாரி அலிஸ் ஒசென்பெய்ன் தெரிவித்துள்ளார்.