Print this page

யாழ். இளம்பெண்ணை கொன்றது கொரோனா

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்தவராவார்.

தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil  பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.