Print this page

கூட்டுப் பயிற்சியில் இலங்கை போர்க்கப்பல்

February 03, 2019

பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சயுரால என்ற கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

28 அதிகாரிகள், 142 மாலுமிகள் என மொத்தம், 170 கடற்படையினருடன் சென்றுள்ள இந்தக் கப்பல், வரும் 6ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.

கராச்சியில் அமான்-2019 கூட்டு கடற்பயிற்சி வரும் 8ஆம் திகதி தொடக்கம், 13ஆம் திகதி வவரை இடம்பெறவுள்ளது.