Print this page

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில்

February 03, 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த பிரேரணை வெற்றிப்பெற்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்துகொள்வார்கள் என, தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காககட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காத்திருப்பதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க தற்போது கூட தேசிய அரசாங்கம் தான் பதவியில் இருக்கிறது என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிடினும் கட்சியின் தலைவரான, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார் என்றும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமது கட்சிக்கு எந்த உத்தியோகப்பூர்வ அழைப்பும் இதுவரை விடுக்கப்படவில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:34