Print this page

தேர்தல் எப்போது? 20 அன்று மஹிந்த தீர்மானம்

கலைக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் கோராப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு, எதிர்வரும் 20ஆம் திகதியன்று இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அவதானத்தை செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்த மஹிந்த தேசப்பிரிய, உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கேட்குமாறு கோரியிருந்தார்.

எனினும், மஹிந்த தேசப்பிரியவுக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர எழுதிய கடிதத்தில்,  தேர்தல் தொடர்பிலான முடிவை, தேர்தல்கள் ஆணைக்குழுவே எடுக்கவேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால், தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 20ஆம் திகதியன்று ஒன்றுகூடிய இறுதி முடிவை எட்டவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Sunday, 12 April 2020 02:48