Print this page

தோப்புகரணத்தால் பணிநீக்கம்

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய நால்வரை பிடித்து, இந்தியா பொலிஸார் தண்டனை வழங்குவதை போல, காதுகள் இரண்டையும் இரண்டு கைகளால் பிடித்து, குனிந்து எழும்பி தோப்புக்கரணம் போடுமாறு பணித்த பொலிஸார் இருவர் பணியிலிருந்து நீக்கபடப்பட்டுள்ளனர். 

கொழும்பு நகர போக்குவரத்து பிரிவில் இணைந்து பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருமே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஊரடங்கு சட்டத்தை மீறி, மருதானை பிரதேசத்தில் உலாவிய நால்வருக்கு, அங்கு போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார், தோப்புக்கரணம் தண்டனையை விதித்தனர்.