கொரோனா வைரஸ், இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரையிலான காலப்பகுதியில்தான் பரவுகிறது என்பது தொடர்பில் வைத்திய விஞ்ஞான ரீதியில் எவ்விதமான கண்டறிதலும் இடம்பெறவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
முழுமையாக திறக்கப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளது என்றும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு, வைத்திய குழுக்களோ, வைத்திய நிபுணர்களோ, எவ்விதத்திலும் அனுமதியளிக்கவில்லை என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரையிலான காலப்பகுதியில்தான் பரவுகிறது என அரசாங்கம் நினைத்தால் அதுதான், “கொரோனா கோச்சோக்” என்றும் தெரிவித்து, ஜே.வி.பி கிண்டல் செய்துள்ளது.