ஒரு மாதத்துக்குப் பின்னர், ஊரடங்கு சட்டம் இன்றுகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
அந்த ஊரடங்கு சட்டம், இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்த போக்குவரத்து அமைச்சு, கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.
எனினும், அந்த கட்டுப்பாடுகள்,வரையறைகள் யாவும் இன்றையதினமே மீறப்பட்டுவிட்டது.
காலியிலிருந்து மாத்தறைக்கு பயணித்த பஸ்ஸில் சமூக இடைவெளி பேணப்படவில்லை. வழமைப்போலவே கூடுதலாக பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றன.