Print this page

சிறுமி திடீரென மரணம் வவுனியாவில் பதற்றம்

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்று (19)  மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார். இந்த சிறுமியின் திடீர் மரணத்தையடுத்து, வவுனியாவில், இனம் புரியாத பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 

இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக, அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.

Last modified on Monday, 20 April 2020 07:46