Print this page

தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கும் சாத்தியம்

 ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடததுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு நாளில் தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செயலாளர்களுடன் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

நாடு, தற்போது முகம் கொடுக்கும் நிலைமையை கவனத்தில் எடுத்து, மே மாதம் 3ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு திகதியை குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மே மாதம் 4ஆம் திகதியன்று வெளியிடப்படும். 

அன்றையதினத்தில், நாடு முகம் கொடுத்திருக்கும் நிலைமையை கவனத்தில் எடுத்து, தேர்தலை ஒத்திபோடுவது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

Last modified on Wednesday, 22 April 2020 01:55