கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் கண்டி, கட்டுக்கஸ்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.
கட்டுக்கஸ்தோட்டை, யட்யாவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் வந்திருந்த நபர், மனைவியுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து, மனைவி நடத்திய தாக்குதலிலேயே 42 வயதான நபர் படுகாயமடைந்துள்ளார்.
அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகின்றது.
அதனையடுத்து, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் அப்பெண், பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் ஒப்படைத்துள்ள பொலிஸார், அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றன.