Print this page

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 30 ரூபாயால் அதிகரிப்பு

February 05, 2019

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை அதிகரிக்கக்கோரி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை,

ஆளுநர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதற்கமைய உடனடியாகவே உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை 20 ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு விவசாய அமைச்சர்

பி.ஹரிசனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி கடந்த முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும்வகையில் 20 ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.