Print this page

மீண்டும் முழு நாட்டுக்கும் ஊரடங்கு?

இன்று 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய பகுதிகளில் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.