Print this page

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் சேவை காலம் நீடிப்பு

February 05, 2019

 

இன்றுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர் லத்திபினுடைய சேவை காலம் நீடிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

40 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி 11 ஆவது பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல்வேறு பாதாள குழு நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவரது சேவை காலத்தை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.