Print this page

415 ஆவது நோயாளி கர்ப்பிணி தாய்- குழந்தை இறந்தது

புதிய தகவல்களின் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக இனங்காணப்பட்ட 415ஆவது நோயாளி, மருதானையை சேர்ந்தவர் ஆவார்.

அவர், கொழும்பு, டீ. சொய்சா வைத்தியசாலையில் நேற்று (23) குழந்தையை பிரசவித்துள்ளார்.

அக்குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

Last modified on Saturday, 25 April 2020 01:38