தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மோட்டார் சைக்கிள், அடையாள அட்டை என்பன வல்வெட்டித்துறை மயிலியதனைப் பகுதி கடற்கரையோரமாக நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்கப்பட்டன..
இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது.
நேற்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், முன்னதாக குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவர் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியிலும் விசாரணைகள் நடந்து வருகிறது.