Print this page

பறந்த போலி வைத்தியர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி, சுமார் 5 மாவட்டங்கள் ஊடாக, தன்னுடைய காரில் பயணித்த போலி வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியர்,  ராகமையிலிருந்து மாத்தரை மாலிமபட வரைக்கும் பயணித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலிம்பட பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்தே, அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், காரில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர், தன்னுடைய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டது. 

ஆனால், அவர் ராகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் என கண்டறியப்பட்டது. 

அவர், ராகமையிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். அதற்காகவே, போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

 

Last modified on Sunday, 26 April 2020 01:35