Print this page

இராணுவ கப்டனுக்கு கொரோனா

இராணுவ கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதனையடுத்து சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டது

அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

இவரின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இவருக்கும் தொற்று இருக்கக் காணப்பட்டது.

தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸ் ஆராய்ந்து வருகிறது .