Print this page

நாடு முழுதும் நாளை ஊரடங்கு

ஊரடங்கு சட்டம், நாளை (27) தளர்த்தப்படாது என்றும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

விடுமுறையில் சென்றிருக்கும் படையினரை, தத்தமது முகாம்களுக்கு கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, சிலாபம்,  ஆகிய மாவட்டங்கள் கேகாலையில் வறக்காபொல மற்றும் கண்டியில் அலவத்துகொட ஆகிய பொலிஸ் பிரதேசங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நாளைக்காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது,