Print this page

அவிசாவளையில் 1ஆவது நோயாளி சிக்கினார்

வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி விடுமுறையில், அவிசாவளை குடகம-இயலவத்தை பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறவினர்கள் மற்றும் அவருடன் நெருக்கிப் பழகிய 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

குறித்த கடற்படை வீரர் கடந்த 18 ஆம் திகதி வெலிசர முகாமிலிருந்து வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.