Print this page

மற்றுமொரு இராணுவ முகாம் மூடப்பட்டது

இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதை அடுத்து, அவர் கடமையிலிருந்த இராணுவ முகாம் மூடப்பட்டுள்ளது. 

கொழும்பு-2 கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் ஆறாவது பொறியியல் ரெஜிமென்டே நேற்று முடக்கப்பட்டது.

அங்கு கடமைபுரிந்த லான்ஸ் கோப்ரல் ஒருவர் அளவ்வ பகுதியில் உள்ள தமதுவீட்டுக்கு சென்றிருந்த சமயம் சுகயீனமடைந்து வைத்தியசாலைக்கு சென்று பின்னர் கொரோனா அறிகுறிகள் இல்லாதபடியால் முன்னெச்சரிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

பின்னர் அவருக்கு திடீரென கொரோனா அறிகுறிகள் வந்துள்ளன. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்பட்டு ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் பணிபுரிந்த முகாமில் அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாமும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதால் ஏற்கனவே வெலிசர கடற்படை முகாம்,சீதுவ விசேட படைப்பிரிவு என்பன முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .