Print this page

48 மணிநேரத்தில் 100 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 11.53 மணியளவில் வெளியான தகவல்களின் பிரகாரம், 523 ஆக அதிகரித்துள்ளது.

மிக சீக்கிரமாகவே இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதி வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் பின்னரான புள்ளிவிபரவியல் அறிக்கையின் பிரகாரம்

முதலாவது 100 நோயாளர்கள் 57 நாட்களில் இனங்காணப்பட்டனர்.(100 நோயாளர்கள்)

இரண்டாவது 100 நோயாளர்கள் 19 நாட்களில் இனங்காணப்பட்டனர். (200 நோயாளர்கள்)

மூன்றாவது 100 நோயாளர்கள்  9 நாட்களில் இனங்காணப்பட்டனர் (300 நோயாளர்கள்)

நான்காவது 100 நோயாளர்கள் 4 நாட்களில் இனங்காணப்பட்டனர் (400 நோயாளர்கள்)

ஐந்தாவது 100 நோயாளர்கள் 2 நாட்களில் இனங்காணப்பட்டனர் (500 நோயாளர்கள்) என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.