Print this page

ராஜீவ்காந்தி கொலை- முருகனின் தந்தை மரணம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முருகனின் தந்தை உடல் நலக்குறைவால் இலங்கையில் உள்ள யாழ்பாணம் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவருடைய தந்தை வெற்றிவேல் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து  சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.

உடல்நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையைப் காணொலி காட்சி வழியாக பார்க்க முருகனின் சார்பாக அவரின் வழக்கறிஞர் தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் முருகனின் தந்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Monday, 27 April 2020 05:27