Print this page

10,346 பேருக்கு சகல பாடங்களிலும் “ஏ” சித்தி

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின.

பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள முகவரியின் ஊடாக பார்வையிடலாம் என பரீட்சைக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியானது.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84 சதவீதமான மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 63.82 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெற்றுள்ளதாகவும் 10,346 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Last modified on Monday, 27 April 2020 13:35