Print this page

ஜனாதிபதி செயலணியில் சிலருக்கு கொரோனா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கை காரியாலயத்தில் கடமையாற்றும் சிலர், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நேற்று (27) செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Monday, 27 April 2020 11:18