Print this page

ஊரடங்கு சட்டம்- கோத்தா அதிரடி அறிவிப்பு

ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

மதத்தலைவர்கள் சிலருடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி விஹாரையின் மாநாயக்கர் இத்தாபானே தம்மாலங்கார தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து இந்த மதத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

நோய்த் தொற்று பரவுகையை விரைவில் கட்டுப்பாட்டுக் கொண்டு வர முடியும் எனவும், பின்னர் ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்தலாம் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மனித படுகொலைகளை மட்டும் நோக்கமாக கொண்டது அல்லது எனவும் அதனை விடவும் வேறும் நோக்கங்களைக் கொண்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிக செலவுடைய தேர்தல் பிரச்சாரங்களை வரையறுத்து புதிய தேர்தல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Friday, 01 May 2020 07:59