Print this page

மதுஷை அழைத்துவர நடவடிக்கை - ருவான் விஜயவர்தன

February 06, 2019

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் ஈடுபட்டுவந்த மாகந்துர மதுஷை கைதுசெய்தமை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தமக்கு இதுவரை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை என, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறியுள்ளார்.

எனினும், டுபாய் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மாகந்துர மதுஷை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகந்துர மதூஸ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்கள், டுபாயிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின்

பின்னரே அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என, டுபாய் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்களில் காணப்படும் பாதாள உலக குழு உறுப்பினர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான

நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:34