Print this page

நாவல் நகரில் பதற்றம்- கடைகள் மூடப்பட்டன

நாவலப்பிட்டியில் இருவர், அங்குமிங்கும் நடமாடியதால், சகல கடைகளும் இன்று இழுத்து மூடப்பட்டன. இதனால், நாவலப்பிட்டிய நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தமையால், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, நாவலப்பிட்டிய நகரத்தை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நகருக்கு வந்திருந்தனர்.

எனினும்,கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவர், நகரில் அங்குமிங்கும் நடமாடியுள்ளனர். இதுதொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே கடைகள் இழுத்து மூடப்பட்டன.

இந்த கடைகள், எதிர்வரும் திங்கட்கிழமை வரையிலும் மூடியே வைப்பதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, குளியாப்பிட்டிய நகரிலுள்ள கடைகளும் மூடப்பட்டன. 

Last modified on Wednesday, 29 April 2020 10:01