Print this page

பிரதி பொலிஸ்மா அதிபர் மீது முறைப்பாடு

February 06, 2019

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந் பெர்னாண்டோவுக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் இன்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, தனது முறைப்பாட்டில் தவராசா குறிப்பிட்டுள்ளார்.