Print this page

ஊரடங்கில் 70 இலட்சம் பெண்கள் கர்ப்பம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில், 70 இலட்சம் பெண்கள், உலகளாவிய ரீதியில் எதிர்பாராத கர்ப்பமடைவர் என்று ஐக்கிய நாடுகள மக்கள் தொகை மத்திய நிலையம் அறிவித்துள்ளது, 

பெண்களுக்கான கர்ப்பத்தை தடுக்கும் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை கொண்ட 114 நாடுகளில் 4.7 கோடி பெண்களுக்கு உரிய கருத்தடை வசதிகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

இதனால், உலகளாவிய ரீதியில் 70 இலட்சம் பெண்கள் எதிர்பாராத கர்ப்பமடைவர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.