Print this page

வெளிநாட்டில் மனைவி கொலை- இலங்கையர் கைது

February 07, 2019

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பொரும்பான்மை இனத்தை சேர்ந்த நபர் ஒருவர் பெர்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெர்த்தின் Danehill Way பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 44 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவசர சேவைப்பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக சென்ற அவசர சேவைப்பிரிவினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பெர்த் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எனினும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை அனுமதியற்ற தடுப்புக்காவலில் தற்போது அவர் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபருக்கு எதிராக பொலிஸார் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Thursday, 07 February 2019 02:30