இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 172 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மாவட்டங்களில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 165 ஆகும்.
இதேவேளை, நுவரெலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.