Print this page

பக்கத்து வீட்டு தந்தை - சிறுமியை வன்புணர்ந்தார்

15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததையடுத்து பேரப் பிள்ளையை சென்று பார்ப்பதற்காக தாய் தந்தை மற்றும் சிறிய சகோதரன் ஆகியோர் ஏனைய இரு மகள்களையும் குறித்த 14 வயது மகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கடந்த மார்ச் மாதம் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பேரப்பிள்ளையை பாக்க சென்ற தாய் தந்தையினர் திரும்ப தமது வீட்டிற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த 14 வயது சிறுமி மற்றும் அவருடைய இரு சகோதரிகள் உட்பட 3 சிறுமிகளும் தனியே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சிறுமிகள் தனியே இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்து குறித்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை இரத்தினபுரியில் இருந்து வரமுடியாத நிலையில் இருந்த குறித்த சிறுமியின் பெற்றோரை பொலிஸார் விசேட அனுமதி வழங்கி வீட்டிற்கு வரவழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Last modified on Sunday, 03 May 2020 00:35