Print this page

98 ஆயிரம் பேர் தனிமை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 9,660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மிகுதி 88 ஆயிரத்து 273 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.