Print this page

இலங்கையில் 9 ஆவது மரணம் சம்பவித்துள்ளது

கொழும்பு, மோதரையில் 52 வயதான பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய உறவினர்கள், வீட்டிலிருந்தோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதுமட்டுமன்றி நெருங்கி பழகியவர்கள் சகலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டார் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Tuesday, 05 May 2020 16:08