மத்திய பிரதேசத்தில் சிறையில் கொலை கைதி ஒருவர் தனது ஆணுறுப்பை தனக்குதானே 'நறுக்' செய்து சிவலிங்கத்திற்கு படைத்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கைதி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து குவாலியர் மாவட்ட மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் மனோஜ் கூறியது, இன்று காலை 6.30 மணியளவில் சிறைக்குள் உள்ள சிவன் கோயில் முன்பாக கைதி ஒருவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவனை சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்.அப்போது தனது ஆணுறுப்பை நறுக்கியது தெரியவந்தது.
விசாரணையில், அந்த கைதியின் பெயர் விஷ்ணு சிங் ரஜாவாத் என்பதும், கொலை வழக்கில் 2018-ம் ஆண்டு தண்டனை பெற்று குவாலியர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து கைதியிடம் நடத்திய விசாரணையில், தனது கனவில் சிவன் தோன்றி, உனது ஆணுறுப்பை தனக்கு காணிக்கையாக படைக்குமாறும் கூறியதால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறினான்.
எனினும் சிறைக்குள் விஷ்ணு சிங்கிற்கு எதிரிகள் யாரேனும் கொலை செய்யும் நோக்குடன் முயற்சித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு சிறை கண்காணிப்பாளர் கூறினார்.